×

திரிபுரா பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து 5 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்; அமளியில் ஈடுபட்டு அவை மாண்பை சீர்குலைத்ததாக நடவடிக்கை..!!

திரிபுரா: திரிபுரா பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து 5 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திரிபுரா மாநிலத்தில் திரிபுரா சட்டப்பேரவைக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முந்தைய கூட்டத்தொடரில் பாஜக எம்.எல்.ஏ. ஜதப் லால் நாத் ஆபாச வீடியோக்களை பார்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். மேலும் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் அனிமேஷ் டெபர்மா கேள்வி கேட்டபோது தொடர் சலசலப்பு ஏற்பட்டது. சபாநாயகர்கள் இவரது கேள்வியை ஏற்க மறுத்துவிட்டு நிதியமைச்சரின் வரவு செலவு திட்டத்தை தொடர்ந்து பேச ஆரம்பித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த எதிர்க்கட்சிகள் சட்டசபையில் மேஜை மீது ஏறி போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவை மாண்பை சீர்குலைத்ததாக பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து 5 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரசை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள், திப்ரா மோதாவை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

The post திரிபுரா பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து 5 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்; அமளியில் ஈடுபட்டு அவை மாண்பை சீர்குலைத்ததாக நடவடிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Tripura Budget Session ,Amadi ,Tripura ,Tripura Budget ,Amani ,Dinakaran ,
× RELATED மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை